Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 12 February 2012

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி கண்டுபிடிப்பு



உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் எகிப்தில், பழங்காலத்தில், அரசர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இறந்தால், அவர்களின் உடல்களை மூலிகைகளால் பதப்படுத்தி, பின், அவற்றை மரக் கட்டைகளால் மூடி, கல்லறைகளில் பாதுகாக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதை மம்மி என அழைக்கின்றனர்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த, பேசல் பல்கலை கழக மாணவர்கள் சிலர், சமீபத்தில் எகிப்தில், "மம்மி' குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை ஒன்றை கண்டு பிடித்தனர். 



மலை முகடுகளுக்குள் அமைக்கப்பட்டிருந்த இந்த கல்லறையை தோண்டியபோது, அங்கு பெண் மம்மி ஒன்று, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

அங்கு செதுக்கப்பட்டு இருந்த குறிப்புகளில் இருந்து, அந்த மம்மி, கி.மு. 945-712 இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பெண்ணுடையது என்றும், அவர், வழிபாட்டு தலங்களில் பாடகியாக இருந்தவர் என்பதும் தெரிய வந்தது. உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள இந்த மம்மி குறித்து, தொல்பொருள் துறையினரும், வரலாற்று ஆய்வாளர்களும் விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.




Post Comment

0 comments:

Post a Comment