
ஆனைக்கும் அடி சறுக்கும்" என்பார்கள் அதன் நடைமுறை நிகழ்வை இச்செய்தியின் மூலம் அறியலாம்.
உலகத்திலேயே வல்லரசு நாடு என தன்னை தானே மார்தட்டி கொள்ளும் அமெரிக்காவுக்கு உலக நாடுகளில் நகரங்கள் எங்கு உள்ளது என தெரியாமல் இருப்பது நகைப்புக்குரியாதாக உள்ளது.
அமெரிக்கா ராஜ்யமானது உலகத்தில் மிக சக்தி வாய்ந்த நாடாக இருக்கலாம், ஆனால் அது புவியியல் பற்றி மிகவும் அறிவுள்ள நாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை

இங்கிலாந்தின் தலைநகரமான லண்டன் மெதுவாக நகருந்து நோர்போலக்குக்கு (Norfolk) சென்றுள்ளது.
ஐக்கிய அமெரிக்கசெய்தி சேனல்கள் தங்கள் வெளியுறவு அறிக்கைக்கான வரைபடங்கள் மற்றும் கிராபிக்ஸில் அந் நாடு பிராந்தியங்களையும் நகரங்களையும் மாற்றி பெயரிடுவதிலும் குறிப்பிடுவதிலும் சொதப்பி வருகிறார்கள்.
எவ்வாறாயினும் தவறான பிராந்தியங்களில் நகரங்களை பெயரிடவும் ,அவ்வாறு வேறு வேறு பிராந்தியங்களை மாற்றி பெயரிடுவதிலும் முழு கண்டத்தையுமே குழப்பி காண்பிக்கிறார்கள்

லிபியாவில் நடந்த புரட்சியின் போது திரிபோலியை லெபனான் நாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் கென்ஸ் நகரம் வட ஸ்பேனில் காட்டப்பட்டுள்ளது.

2010-ல் தென்ஆப்பிரிக்காவில் நடந்த உலககிண்ண உதைபந்தாட்ட போட்டியை WGN9 Channelv தென்அமெரிக்காவில் சுட்டிகாட்டுகின்றது.
உதாரணத்துக்கு வார இறுதி சிஎன்என் - 212 நாடுகளில் பார்க்ககூடிய செய்திச்சேவை - அதன் தொலைபேசி ஹேக்கிங் கைது தொடர்பான அறிக்கையின் போது நோர்போக் தங்கள் சொந்த தலைநகரையே நோர்போக் நகரத்துக்கு மாற்றி கொண்டுபோய் விட்டர்கள்.
18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோரில் பத்து பேருக்குள் ஒருவருக்கு தங்கள் நாடு உலக வரைபடத்தில் எங்க உள்ளது என தெரியாமல் இருக்கின்றனர்.
0 comments:
Post a Comment