Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 14 February 2012

காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை



உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடும் வேளையில் இளம் காதலன் , தனது காதலியை சந்திக்க சென்ற போது அந்த பெண் வீட்டார் அடித்து உதைத்து இவனது உயிரை பறித்தனர்.
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டாலும் காதலர் தினத்தில் ஒரு காதலர் கொல்லப்பட்டிருப்பது காதலுக்கு இன்றும் எதிர்ப்பு சவால்கள் இருப்பதே உண்மை . கடந்த 14 ம் நூற்றாண்டில் வேலன்டைன் பாதிரியார், காதலித்தவர்களை திருமணம் செய்து வைக்க தன் உயிரை இழந்தார் என்பதும், இவரது நினைவாக காதலர் தினம் ( பிப்- 14 ) கொண்டாடப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று உலகம் முழுவதும் குறுந்தகவல்கள், மெயில், மூலம் காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


ஓட்டல்கள், பீச்சுகள், பூங்காக்ககள் நிரம்பி வழிகின்றன. இதற்கென பல மாவட்டங்களில் இருந்து மலர் வரவழைக்கப்பட்டு வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில் காதலர்களுக்கு கவலை தரும் ஒரு கொலை நடந்திருக்கிறது.காதலியை சந்திக்க சென்ற போது., உ .பி., மாநிலம் மீரட் நகர் அருகே நடந்த சம்பவம் குறித்தவிவரம் வருமாறு; 


கேத்வான் நகரை சேர்ந்த ரசீத் ( வயது 15 ) . இவர் அருகில் உள்ள சர்தானா பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்தார். இது அரசல் புரசலாக பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனால் மாணவி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. காதலர் தினமான இன்று காதலியை சந்தித்தே தீர வேண்டும் என ரசீத்துக்கு எண்ணம் ஏற்பட்டது. எப்படியாவது அவரது வீட்டுக்கு சென்று பார்த்து பேசி விட வேண்டும் என வீரத்துடன் கிளம்பினார் . அங்கு அவளை சந்தித்தார். மகிழ்ச்சி சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. 


இவர்களது சந்திப்பு மாணவியின் உறவினர்களுக்கு தெரிந்ததும் சந்தித்தஇடத்திற்கு வந்தனர். காதலனை பிடித்து, அடித்து துவைத்து எடுத்தனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் ரோட்டில் கிடந்தான். மாணவிக்கும் அடி - உதை விழுந்தது. தகவல் அறிந்த ரசீத்தின் பெற்றோர்கள் காதலனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. காதலர் தினமான இந்நாளில் ஒரு கொலை நடந்திருப்பது காதலர்களுக்கு பெரும் கவலையாகாத்தான் இருக்கும்.





Post Comment

0 comments:

Post a Comment