கமல் நடித்த தசாவதாரம் படத்தை தயாரித்த, ஆஸ்கர் பிலிம்ஸ், மீண்டும் கமலை வைத்து, ஒரு படம் தயாரிக்கிறது.
இதில், கமலுடன் அஜீத்தும் இணைகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், கமல் நடித்து வரும் விஸ்வரூபம், அஜீத் நடித்து வரும் பில்லா 2, படப்பிடிப்புகள் முடிந்ததும் தொடங்கும்.
கவுதம் மேனனுக்கு எதிர்ப்பு:
விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில், "ஹோசன்னா...' என்ற பாடல், பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது. ஆனால், "ஹோசன்னா...' என்ற வார்த்தை, எங்கள் வழிபாட்டுக்குரியது என்று, கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள், போர்க் கொடி பிடித்துள்ளன. "பாடலில் இருந்து இந்த வார்த்தையை நீக்காவிடில், வழக்கு தொடர் வோம்...' என்றும் கூறியுள்ளன. அதனால், அந்த வார்த்தையை நீக்க முடிவெடுத்துள்ளார், அப்பட இயக்குனரான கவுதம் மேனன்.
மணிரத்னம் படத்தில் ஆந்திர சூப்பர் ஸ்டார் மகள்:
தன் புதிய படத்துக்கு, பூக்கடை என்று பெயர் வைத்துள்ளார் மணிரத்னம். மேலும், அக்ஷரா, கீர்த்தனா, துளசி என்று ஏராளமான நடிகைகளை அழைத்து, "மேக்-அப் டெஸ்ட்' எடுத்த மணிரத்னம், இப்போது, மஞ்சு என்ற நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்த மஞ்சு, ஆந்திர சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment