Pages

Subscribe:

Ads 468x60px

Monday, 6 February 2012

பிலிப்பைன்ஸின் நீக்ரோ தீவுகளில் நிலநடுக்கம்




மணிலா: பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5 பேர் பலியாகியுள்ளனர். 29 பேரின் கதி என எனத் தெரியவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் நீக்ரோ தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.


நிலநடுக்கத்தில் இதுவரை மொத்தம் 7பேர் பலியாகியுள்ளனர்.
நிலநடுக்கத்தால் கல்லூரி மாணவர் உட்பட பேரும் ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.



மேலும் நிலநடுக்கம் ஏற்படுத்த்திய நிலச்சரிவில் 30 வீடுகள் புதையுண்டு போனதில் 29 பேரின் கதி என்ன என்றும் தெரியவில்லை.
பிலிப்பைன்ஸ் நாட்டு நேரப்படி முற்பகல் 11.49 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.



                                                                             
இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

இருப்பினும் சுனாமி எச்சரிக்கையை பிலிப்பைன்ஸ் அரசு பிற்பகல் 2.30 மணிக்கு அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. 

இருப்பினுடம் கடல் கொந்தளிப்பு மிக அதிகமாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் மணிலாவிலிருந்து 650 கிலோ மீட்டர் தொலைவு தென்கிழக்கில் நீக்ரோ தீவின் டுமாகிடே நகரத்தின் வடக்கில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

Post Comment

0 comments:

Post a Comment