
ஆஸ்திரேலியாவில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. இன்று நடந்த முதலாவது போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங் தேர்வு செய்தார்.
வினய் அபாரம்:

மழை குறுக்கீடு:
ஆஸ்திரேலிய அணி 11 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்த போது, மழை காரணமாக ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்திற்கு பின், 32 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது.
வேட் அரைசதம்:
ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் (10), ரோகித் சர்மா சுழலில் சிக்கினார். அடுத்து வந்த மைக்கேல் ஹசியுடன் இணைந்த வேட், அரைசதம் அடித்தார். வேட் 67 ரன்கள் எடுத்த போது, ராகுல் சர்மா சுழலில் "கிளீன் போல்டானார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய மைக்கேல் ஹசி (45), வினய் குமார் வேகத்தில் அரைசத வாய்ப்பை இழந்தார்.

பின் இணைந்த டேவிட் ஹசி, டேனியல் கிறிஸ்டியன் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இந்திய பந்துவீச்சை பதம்பார்த்த டேவிட் ஹசி, அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 32 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது. டேவிட் ஹசி (61), டேனியல் கிறிஸ்டியன் (17) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் வினய் குமார் 3, ரோகித் சர்மா, ராகுல் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சச்சின் "அவுட்:
பின் கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சச்சின், காம்பிர் ஜோடி துவக்கம் கொடுத்தது. உலக கோப்பை தொடருக்கு பின், முதன்முதலில் ஒருநாள் போட்டியில் விளையாடிய சச்சின், 2 ரன்களுக்கு ஸ்டார்க் வேகத்தில் அவுட்டானார். இதன்மூலம் தனது சதத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை இழந்தார். மற்றொரு துவக்க வீரர் காம்பிர் (5) ஸ்டார்க் வேகத்தில் சரணடைந்தார்.
அடுத்து வந்த விராத் கோஹ்லி, ரோகித் சர்மா பொறுப்பாக ஆடினர். ஆனால் இது நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
மெக்கே வேகத்தில் கோஹ்லி (31), ரோகித் (21) வெளியேறினர். சுரேஷ் ரெய்னா (4) ஏமாற்றினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் தோனி (29), ரவிந்திர ஜடேஜா(19) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அஷ்வின் (5), ராகுல் சர்மா (1), பிரவீண் குமார் (15) உள்ளிட்டோரும் ஏமாற்ற, இந்திய அணி 29.4 ஓவரில் 151 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் மெக்கே 4, ஸ்டார்க், தோகர்டி தலா 2, கிறிஸ்டியன் ஒரு விக்கெட் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஆஸ்திரேலி துவக்க வீரர் மாத்யூ வேட் தேர்வு செய்யப்பட்டார்.
பெர்த்தில், வரும் 8ம் தேதி நடக்கவுள்ள இரண்டாவது போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
0 comments:
Post a Comment