Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 8 February 2012

இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது


Ravindra Jadeja and R Ashwin walk off after India's win


பெர்த் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் இரண்டாவது போட்டியில் இந்தியா, இலங்கையை எதிர்த்து களமிறங்கியது.

முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணியின் தில்ஷன் (48), சங்ககரா (26), ஜெயவர்தனா (23) ஓரளவு கைகொடுத்தனர். சண்டிமால் 64 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்தது. மாத்யூஸ் (33) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அஷ்வின் 3, ஜாகிர் கான் 2 விக்கெட் வீழ்த்தினர்.


MS Dhoni stumps Thisara Perera off R Ashwin's bowling

கோஹ்லி அபாரம்:
எட்டிவிடும் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சேவக் (10) ஏமாற்றமான துவக்கம் தந்தார். சற்று நம்பிக்கையுடன் காணப்பட்ட சச்சின் 48 ரன்னுக்கு அவுட்டாகி, சதத்தில் சதம் அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். ரோகித் சர்மா (10), ரெய்னா (24), தோனி (4) நிலைக்கவில்லை. கோஹ்லி 77 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி 46.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அஷ்வின் (30), ஜடேஜா (24) அவுட்டாகாமல் இருந்தனர்.

Post Comment

0 comments:

Post a Comment