Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 19 February 2012

பிரபுதேவா நினைவாக குத்திய பச்சையை அழிக்கிறார் நயன்தாரா

Nayanthara decides to remove Prabhudeva tatoo in her hand


பிரபுதேவாவை பிரிந்துவிட்ட நயன்தாரா, அவரின் நினைவுகளையும் முற்றிலுமாக அழிக்க நினைக்கிறார், இதனால் தனது கையில் பச்சையாக குத்தியுள்ள பிரபு என்ற பிரபுதேவாவின் பெயரை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழிக்கவுள்ளார்.
பிரபுதேவாவின் மீதுள்ள தீவிர லவ்வால், அவருக்காக நடிப்புக்கு முழுக்கு போட்டு, மதம் எல்லாம் மாறினார். போதாகுறைக்கு பிரபுதேவாவின் பெயரையே கையில் பச்சை குத்திக்கொண்டார். அப்படியெல்லாம் பிரபுதேவா மீது லவ்வோ லவ்வாக இருந்த நயன்தாரா, இப்போது அவரை பிரிந்து விட்டார். 

பிரபுதேவாவை பிரிந்த நயன்தாரா மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்திலும், தமிழில் அஜீத்துடன் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் பிரபுதேவாவை முழுமையாக பிரிந்து விட்ட நயன்தாரா அவரது நினைவுகள் மற்றும் அடையாளங்களை கூட முழுவதுமாக அழித்து விட வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக தனது கையில் பச்சையாக குத்திக் கொண்டுள்ள பிரபுதேவாவின் பெயரை அழிக்க எண்ணியுள்ளார். இதுதொடர்பாக மருத்துவர்களிடம் அவர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இதனை நீக்கி விடலாம் என்றும், அதேசமயம் கையின் அழகும் கெடாது என்று கூற இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவெடுத்து இருக்கிறார் நயன்தாரா.




Post Comment

0 comments:

Post a Comment