
முதல் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங் தேர்வு செய்தார். வாடே அசத்தல்: ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், வாடே இணைந்து துவக்கம் தந்தனர். 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வார்னர், ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து வந்த பெர்ட் (17) அஷ்வின் சுழலில் வீழ்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாடே "டுவென்டி-20 அரங்கில் முதல் அரைசதம் அடித்தார்.


20 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அஷ்வின், வினய் குமார் தலா, ரெய்னா, ராகுல் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, துவக்க வீரர் சேவக் (4) முதல் ஓவரிலேயே டேவிட் ஹசியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின் வந்த கோஹ்லி (22),ரெய்னா (14), ரோகித் (0) வீரர்களும் ஏமாற்றினர்.
கேப்டன் தோனி, அஷ்வின் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்திய அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில், கிறிஸ்டியன், டேவிட் ஹசி இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
0 comments:
Post a Comment