ஷங்கர் படத்தில் ஜாக்கி சான்!
இந்தியன் படத்தில் இணைந்த கமல் - ஷங்கர் கூட்டணி, மீண்டும் இணைகிறது. அப்படத்தை, எந்திரனை மிஞ்சும் பட்ஜெட்டில் தயாரிக் கிறது ஆஸ்கர் பிலிம்ஸ். மேலும், இதில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானையும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. ஜாக்கி சான் நடித்த அனைத்து படங்களையும், இந்தியாவில் ரிலீஸ் செய்தது ஆஸ்கர் பிலிம்ஸ் என்பதால், இப்படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி விடும் என்கின்றனர்.
இயக்குனரான லட்சுமி ராமகிருஷ்ணா!
பிரிவோம் சந்திப்போம் படத்தில், சினேகாவுக்கு அம்மாவாக நடித்து, தமிழுக்கு அறிமுக மானவர் லட்சுமி ராமகிருஷ்ணா. அதைத் தொடர்ந்து, 33 படங்களில் நடித்திருக்கும் அவர், ஆரோகணம் என்ற பெயரில், தற்போது ஒரு படம் இயக்கி வருகிறார். "புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்திற்கு பின், முன்னணி நடிகர்களை வைத்தும் படம் இயக்குவேன்...' என்று சொல்லும் லட்சுமி, "பெண் இயக்குனர்களாலும் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவேன்...' என்கிறார். தான் கற்ற ஒன்றை தரிக்க உரை!
உற்சாகத்தில் த்ரிஷா!
தெலுங்கு, பாடிகார்ட் படத்தில் நடித்த த்ரிஷாவுக்கு, பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. காரணம், அப்படத்தின் தமிழ்ப் பதிப்பான காவலனில், அசின் நடித்ததை விடவும், சிறப்பாக நடித்துள்ளார் த்ரிஷா. இதனால், மேலும், சில படங்கள் கிடைக்க, இதுவரை சென்னை - ஐதராபாத் என்று பறந்து கொண்டிருந்த த்ரிஷா, இப்போது ஆந்திராவிலேயே முகாம் போட்டு விட்டார். அலை மோதும் போதே கடலாட வேண்டும்!
ஜெயம் ரவியை பாதித்த நேதாஜி!
நேதாஜி சபாஷ் சந்திரபோசின் வாழ்க்கை வரலாற்றை மனப்பாடம் செய்து வைத்துள்ளார் ஜெயம் ரவி. "சுதந்திரத்துக்காக போராடிய நேதாஜியின் மறைவு, மர்மமாக இருப்பதை படித்தபோது, நிஜமாலுமே கலங்கி விட்டேன்...' என்று சொல்லும் ஜெயம் ரவிக்கு, நேதாஜி வேடத்தில், ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது ஆசையாக உள்ளது. அந்த பெருமைக்குரிய வாய்ப்பினை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக சொல்கிறார்.
விக்ரம் - சற்குணம் புதிய கூட்டணி!
விமல் நடித்த, களவாணி, வாகை சூடவா படங்களை இயக்கிய சற்குணம், அடுத்து, "ஸ்டார் வேல்யூ' படங்களை இயக்க தயாராகி விட்டார். முதன் முதலாக விக்ரமை வைத்து, ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கும் சற்குணம், ஒரு உணர்வுப் பூர்வமான காதல் கதையில் நடிக்க, சில இளவட்ட ஹீரோக்களையும் தேர்வு செய்து வருகிறார். இந்த இரண்டு படங்களையடுத்து, மீண்டும் விமலை வைத்து ஒரு படம் இயக்குகிறார்.
ஆர்யா - அனுஷ்கா கடும் போட்டி!
வேட்டை படத்தில், மாதவனுடன் போட்டி போட்டு நடித்த ஆர்யா, இப்போது, இரண்டாம் உலகம் படத்தில், அனுஷ்காவுடன் போட்டி போட்டு நடித்து வருகிறார். இருவருக்குமே சம அளவிலான எதிரும், புதிருமான வேடங்கள் என்பதால், நீயா - நானா என்ற அளவுக்கு நடிக்கின்றனர். இதுபற்றி ஆர்யா கூறுகையில், "அனுஷ்கா திறமையான நடிகை என்பதால், அவருக்கு இணையான நடிப்பை, கஷ்டப்பட்டு வெளிப்படுத்தி வருகிறேன்...' என்கிறார்.
இந்திக்கு செல்லும் ஐஸ்வர்யா தனுஷ்!
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள, 3 படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அப்படத்தின், "கொலை வெறி' பாடலுக்கு ஏற்பட்ட வரவேற்பு காரணமாக, 3 படத்தின், இந்தி ரீ- மேக்கில் நடிக்க ஆர்வமாக உள்ளார் அபிஷேக் பச்சன். அதனால், சமீபத்தில், ஐஸ்வர்யாவை மும்பைக்கு அழைத்து, கதை கேட்ட அபிஷேக், "கொலை வெறி...' பாடலும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார். ஆக, முதல் படம் திரைக்கு வரும் முன்பே இந்தி படம் இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!
0 comments:
Post a Comment