
நெதர்லாந்தை சேர்ந்த லாரா டக்கர், 16 வயது இளம் பெண், படகு மூலமாக தன்னந்தனியே உலகைச் சுற்றி, சாதனை படைத்துள்ளார். கடந்த 2010, ஆகஸ்ட் மாதம் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் துவங்கிய இவரது சாதனைப் பயணம், இந்தாண்டு ஜனவரியில், கரீபியன் கடற்பகுதியில் உள்ள சின்ட் மாட்ரிட் என்ற இடத்தில் முடிவடைந்தது.
போர்ச்சுக்கல், பனாமா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் கடல் வழிகளை கடந்து, தன் சாகசப் பயணத்தை நிறைவு செய்துள்ளார். தன் பயணத்துக்காக, "குப்பி' என பெயரிடப்பட்ட, 38 அடி நீளமுடைய மெகா படகை, பயன்படுத்தினார். சின்னஞ்சிறிய வயதில், லாரா டக்கர் படைத்த சாதனைக்கு பின், ஒரு வேதனையும் உள்ளது.
இந்த சாகசப் பயணத்தை துவக்கப் போவதாக லாரா டக்கர் அறிவித்ததும், "லாராவின் செயல், குழந்தைகள் நலச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது' என, நெதர்லாந்து அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல தடைகளை கடந்து தான், இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் லாரா. இதற்கான ஆசை அவருக்கு எப்படி ஏற்பட்டது தெரியுமா? லாராவின் பெற்றோர், தங்களுக்கு திருமணம் முடிந்த ஒரு ஆண்டுக்கு பிறகு, நியூசிலாந்துக்கு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த கப்பல் பயணத்தில் பிறந்தவர் தான் லாரா. கடலில் பிறந்தவருக்கு, கடல் மீது காதல் வருவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே.
0 comments:
Post a Comment