ஷங்கர் படத்தில் ஜாக்கி சான்! இந்தியன் படத்தில் இணைந்த கமல் - ஷங்கர் கூட்டணி, மீண்டும் இணைகிறது. அப்படத்தை, எந்திரனை மிஞ்சும் பட்ஜெட்டில் தயாரிக் கிறது ஆஸ்கர் பிலிம்ஸ். மேலும், இதில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானையும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. ஜாக்கி சான் நடித்த அனைத்து படங்களையும், இந்தியாவில் ரிலீஸ் செய்தது ஆஸ்கர் பிலிம்ஸ் என்பதால், இப்படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி விடும் என்கின்றனர்.
சிட்னியில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின், முக்கிய லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா 19 புள்ளிகளுடன் பைனலுக்கு தகுதி பெற்றது.
இன்றைய தினம் இரவோடு இரவாக கனடாவில் சுமார் 37 தமிழர்களைப் பொலிசார், வீடு வீடாகச் சென்று கைதுசெய்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இந்தக் கைது நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் கழுத்து வலி என்று பெயரிடப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன். ஆஹா என்ன இது கொஞ்சம் வித்தியாசமான பேரா இருக்கே எண்டு பார்க்கிறீர்களா ? வழமைபோல இந்த மேட்டரும் படு சுவாரசியமானது தான். வாங்க மேட்டருக்குள் போகலாம்
சமூக இணைய தளங்கள் செயல்பாட்டில் முதல் இடம் பிடித்துள்ள பேஸ்புக் தளத்தின் பயனாளர் எண்ணிக்கை 100 கோடியைஎட்டும் என ஐ-கிராசிங் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த லாரா டக்கர், 16 வயது இளம் பெண், படகு மூலமாக தன்னந்தனியே உலகைச் சுற்றி, சாதனை படைத்துள்ளார். கடந்த 2010, ஆகஸ்ட் மாதம் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் துவங்கிய இவரது சாதனைப் பயணம், இந்தாண்டு ஜனவரியில், கரீபியன் கடற்பகுதியில் உள்ள சின்ட் மாட்ரிட் என்ற இடத்தில் முடிவடைந்தது.
இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வில், "மேக்-அப்' தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. திருமணம், பார்ட்டி, அலுவலகம் ஆகியவற்றுக்கு செல்லும் போது, எப்படி, வித்தியாசமாக மேக்-அப் போட்டுக் கொள்வது என, தங்களை அலங்கரித்துக் கொள்ளும் நடைமுறை அதிகரித்துள்ளது.
பிரபுதேவாவை பிரிந்துவிட்ட நயன்தாரா, அவரின் நினைவுகளையும் முற்றிலுமாக அழிக்க நினைக்கிறார், இதனால் தனது கையில் பச்சையாக குத்தியுள்ள பிரபு என்ற பிரபுதேவாவின் பெயரை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழிக்கவுள்ளார்.
இந்திய அணியால் ஆஸ்திரேலியாவை மீண்டும் ஒருமுறை வீழ்த்த முடியவில்லை.
நேற்று நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தயாசத்தில்
படுதோல்வி அடைந்தது. பவுலிங், பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் இந்தியா
சொதப்பியது.
கடந்த வாரத்தில் பத்திரிக்கை மற்றும் இணைய செய்தி தளங்களில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன யானை போன்ற உருவம் கொண்ட மம்முத் மிருகம் சைபீரியாவில் உள்ள ஒர் ஆற்றை கடந்து செல்வது போன்று வீடியோவுடன் கூடிய செய்தி வெளியீடப்பட்டு இருந்தன.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடும் வேளையில் இளம் காதலன் , தனது காதலியை சந்திக்க சென்ற போது அந்த பெண் வீட்டார் அடித்து உதைத்து இவனது உயிரை பறித்தனர்.
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று
இந்தியா, இலங்கை அணிகள் மீண்டும் மோதுகின்றன. கடந்த இரு போட்டிகளில்
தொடர்ந்து வென்ற இந்திய அணி "ஹாட்ரிக்' வெற்றி பெற காத்திருக்கிறது.
உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் எகிப்தில், பழங்காலத்தில், அரசர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இறந்தால், அவர்களின் உடல்களை மூலிகைகளால் பதப்படுத்தி, பின், அவற்றை மரக் கட்டைகளால் மூடி, கல்லறைகளில் பாதுகாக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதை மம்மி என அழைக்கின்றனர்.
முத்தரப்பு தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "டென்ஷன்' நிறைந்த கடைசி ஓவரில் மிகவும் "கூலாக' ஒரு சிக்சர் அடித்த கேப்டன் தோனி, வெற்றியை உறுதி செய்தார். காம்பிரும்(92) அசத்தினார்.
நோக்கியா மொபைல்போன் விற்பனையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் 11 கோடியே 35 லட்சம் விற்பனை செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது நோக்கியா.
பெர்த் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் இரண்டாவது போட்டியில் இந்தியா, இலங்கையை எதிர்த்து களமிறங்கியது.
மூன்றாவது டெஸ்டிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. "ஹாட்ரிக்' தோல்வியால் இங்கிலாந்து அணியின் "நம்பர்-1' இடத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போஸ்ட் நிறுவனத்துக்காக கிரிக்கெட் வீரரான சச்சினை அடிப்படையாக வைத்து வை திஸ் கொலவெறி புகழ் தனுஷ் ஒரு தீம் பாடலை எழுதியுள்ளார். அதற்கு இசை கொலவெறி புகழ் அனுருத் .
மணிலா: பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஏற்பட்டதில் 5 பேர் பலியாகியுள்ளனர். 29
பேரின் கதி என எனத் தெரியவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து
விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின்
நீக்ரோ தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.
வருமா வருமா பனி விழும் காலம் என்று நவம்பர் மாதத்தில் இருந்து எதிர்பாத்து காத்திருந்த பனி காலம். இப்போதான் பார்கிறார்கள் இங்கிலாந்து மக்கள் நாடு நகரங்கள் முழுதும் இவ் உரைப்பணி மூடி விட்டது
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டி இருப்பதாகவும் இதனால் அவருக்கு அமெரிக்காவில் உள்ள பிரபல கேன்சர் இன்டியூட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கல்ப்., செய்தி நிறுவனம் மூலம் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.
பயணி ஒருவர் தவறவிட்ட, ஒரு லட்சத்து 600 ரூபாய் பணப்பையை கண்டெடுத்த பஸ் டிரைவர், கண்டக்டர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், உரியவரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று மெல்போர்னில் துவங்குகிறது. தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கும் இந்திய அணி, வெற்றியை தொடரும் என்று நம்பப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான முதல் "டுவென்டி-20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி இரண்டு "டுவென்டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது.