Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 28 January 2012

விபத்துகளை தடுக்க சீனாவில் புதுதிட்டம்



சீனாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுப்பதற்காக, போலீசார், புதுவிதமான திட்டத்தை செயல்படுத்தி, அதில் கணிசமாக, வெற்றியும் அடைந்துள்ளனர். பரீட்சார்த்த முயற்சியாக, ஜியாங்சு மாகாணத்தில் உள்ள, ஒரு நெடுஞ்சாலையில், போலீஸ் ரோந்து வாகனத்தின் பின்புறத் தோற்றத்தை, அட்டையில் (கார்ட்போர்டு), அச்சு அசலாக வரைந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்தனர். சந்தேகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, சோலார் விளக்குகளையும் அதில் பொருத்தி இருந்தனர்.


கார்களை வேகமாக ஓட்டி வரும் டிரைவர்கள், சாலை ஓரத்தில் இருக்கும் அட்டைகளை பார்த்து, போலீஸ் ரோந்து வாகனம் தான் நிறுத்தப்பட்டுள்ளதோ என பயந்து போய், காரின் வேகத்தை குறைத்து, மெதுவாக செல்லத் துவங்கினர். இதையடுத்து, மேலும், சில சாலைகளிலும், இதுபோன்ற போலி போலீஸ் ரோந்து வாகனத்தை நிறுத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


டிரைவர் ஒருவர் கூறும்போது, "காரை வேகமாக ஓட்டி வந்த போது, சாலை ஓரத்தில், ரோந்து வாகனம் தான் நிற்கிறது என நினைத்து, வேகத்தை குறைத்தேன். அதை கடந்து சென்றபின், திரும்பி பார்த்த போது தான், அது ரோந்து வாகனம் இல்லை, வெறும் அட்டை என்பது தெரிய வந்தது...' என்றார்.


"இவை வெறும் அட்டைகள் தான் என்பது, அடுத்த முறை வரும் போது டிரைவர்களுக்கு தெரிந்து விடுமே...' என, போலீசாரிடம் கேட்டால், "இதையெல்லாம் யோசிக்காமலா இருப்போம். குறிப்பிட்ட இடைவெளிகளில் நிறுத்தப்பட்டுள்ள அட்டைகளை தவிர, சில இடங்களில் நிஜமான ரோந்து வாகனத்தை நிறுத்தி, கண்காணிப்போம். எனவே, எது போலி, எது நிஜம் என டிரைவர்களால், அத்தனை சீக்கிரமாக கண்டுபிடித்து விட முடியாது...' என, சிரிக்கின்றனர்.




Post Comment

0 comments:

Post a Comment