
இந்த நம்பிக்கையை, தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டிருக்கிறது, ஒரு பிரபலமான கழிப்பறை சாதன தயாரிப்பு நிறுவனம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, பிரபலமான அணிகலன்கள் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து, ஆடம்பர கழிப்பறையை தயாரித்துள்ளது. இந்த கழிப்பறையில், விலை உயர்த்த, 72 ஆயிரம் ரத்தின கற்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கழிப்பறையின் மொத்த மதிப்பு, 65 லட்சம் ரூபாய். டோக்கியோவில் உள்ள ÷ஷாரூமில், இந்த கழிப்பறை, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர கழிப் பறையை பார்த்து வியந்த ஒரு பெண், "இதை நான் விலைக்கு வாங்கி விட்டால், என் நண்பர்களை அழைத்து வந்து, இந்த கழிப்பறையில் விருந்து அளிப்பேன். அந்த அளவுக்கு ஆடம்பரமாக உள்ளது...' என்றார்.
மற்றொருவரோ, "நம் அந்தஸ்தை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக, இந்த கழிப்பறையை வைத்துக் கொள்ளலாம். ஆனால், இதை பயன்படுத்த முடியாது...' என்றார். இந்த ஆடம்பர கழிப்பறையின் பாதுகாப்பிற்காக, அதன் அருகே, பாதுகாவலர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment