Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 10 June 2012

தனுஷை மீண்டும் வம்புக்கு இழுத்த சிம்பு



தனுஷை வம்புக்கு இழுப்பதே சிம்புவுக்கு வேலையாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இவரின் வாலு படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.
இப்படத்தின் அறிமுக டிரைலரில் சிம்புவைப் பார்த்து ஹன்சிகா, ஒரு சில பசங்கள பாக்க பாக்கத்தான் பிடிக்கும், ஆனா உன்ன மாறி பசங்கள பாத்த உடனே பிடிச்சிடும் என்று வசனம் பேசுகிறார். இது படிக்காதவன் படத்தில் தனுஷ், தமன்னாவை பார்த்து பேசும் படத்தின் டயலாக்கின் உல்டாவாகும். ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, டைரக்டர் தான் அப்படி வைத்தார், நான் யாரையும் வம்புக்கு இழுக்கவில்லை என்று ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்தார் சிம்பு. 

இந்நிலையில் தனுஷை மீண்டும் வம்புக்கு இழுப்பது போன்று பேசியுள்ளார் சிம்பு. செல்வராகவன், பாலா போன்றோர்களின் படங்களின் நடிக்க விருப்பம் இல்லையா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அவர்களின் படங்களில் நடிக்க நான் விரும்பமாட்டேன். அதுபோன்ற கதைகள் தனுஷூக்கு தான் செட் ஆகும்.  என் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்கு படங்களாக இருக்கும். எனக்கு தேசிய விருதோ, ஆஸ்காரோ தேவையில்லை. என் படங்கள் ஓடும் தியேட்டர்களில் கைதட்டலும்,  விசில் சத்தமும் கேட்டாலே போதும் என்று சிம்பு கூறியுள்ளார்.

Post Comment

0 comments:

Post a Comment