Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 10 June 2012

ஆப்பிள் கம்ப்யூட்டர் ரூ.1 கோடிக்கு ஏலம்

முதலில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் ரூ.1 கோடிக்கு ஏலம்

உலகில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனம் முதன்மையாக திகழ்கிறது. கடந்த 1976-ம் ஆண்டு ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த கம்ப்யூட்டர் அதன் துணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னிக் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்ப்யூட்டரை உலகம் முழுவதும் விற்பனை செய்து புகழின் உச்சிக்கு கொண்டு சென்றார்.

இன்று ஆப்பிள் நிறுவனம் ஐபேட் தயாரிப்பு உள்ளிட்ட பல வகைகளில் மிக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் முதன் முதலில் தயாரித்த கம்ப்யூட்டர் சோத்பீஸ் மையத்தில் ஏலம் விடப்பட உள்ளது. அந்த கம்ப்யூட்டர் ரூ.1 கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் கம்ப்யூட்டர் கடந்த 1976-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. அப்போது அதன் விலை ரூ.35 ஆயிரம்.

Post Comment

0 comments:

Post a Comment